'சூர்யா 44' படப்பிடிப்பு இந்த தீவிலா? கார்த்திக் சுப்புராஜின் மாஸ் பிளான்..!

  • IndiaGlitz, [Tuesday,May 14 2024]

நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் 44வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள், எந்த இடத்தில் படப்பிடிப்பு, எத்தனை நாள் படப்பிடிப்பு நடைபெறும்? என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44 ’திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக படப்பிடிப்புக்கு செல்ல படக்குழுவின தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற இருப்பதாகவும், 40 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜூன் 2ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெறும் என்றும் மே இறுதியில் சூர்யா உட்பட படக்குழுவினர் அந்தமான் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்தமான் படப்பிடிப்பை முடித்தவுடன் ஊட்டி மற்றும் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்த கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் படப்பிடிப்புக்கு செல்லும் முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'விடுதலை 2' படத்தின் தாமதத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? பரபரப்பு தகவல்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை' திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படம் வெளியான ஒரு சில மாதங்களில் 'விடுதலை 2' வெளியாகும்

மம்முட்டி - கெளதம் மேனன் படத்தில் இன்னொரு சூப்பர் ஸ்டாரா? 20 வருடங்களுக்கு பின் கூட்டணி..!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் மம்முட்டி நடிக்க இருப்பதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்.. சுரேஷ் சந்திரா கூறிய என்ன?

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

உலகளவில் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ.. அமலாபால் பங்கேற்பு.. வைரல் வீடியோ..!

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் இந்த நேரத்திலும் கூட போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வருகிறார் என்பதும் திரைப்பட புரமோஷன்

கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம்.. அமெரிக்காவில் தயாரான  'தி வெர்டிக்ட்' தமிழ் திரைப்படம்

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின்