close
Choose your channels

சூர்யா, கார்த்தி நடிக்கும் அடுத்த படங்களின் ரிலீஸ் தேதி.. வைரல் தகவல்கள்..!

Sunday, October 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்து முடித்துள்ள ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதேபோல், கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் நடித்து முடித்துள்ள ’வா வாத்தியாரே’ என்ற படத்தின் ரிலீஸ் தகவல் கசிந்துள்ளது.

சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் முதல் முறையாக இணைந்துள்ள ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்குள் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும், அதன் பின்னர் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
2டி மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க, மற்ற முக்கிய கேரக்டர்களில் ஜெயராம், கருணாகரன், சுஜித் சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அதேபோல், கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment