2வது முறையாக கர்ப்பமான சூர்யா, கார்த்தி பட நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Thursday,July 25 2024]

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நாயகியாக நடித்த நடிகைக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமானதாக அறிவித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சூர்யா நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கிய ’மாஸ் என்ற மாசிலாமணி’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட சில தமிழ் படங்களில், இன்னும் பிற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் தொழில் அதிபர் பிரஜின் என்பவரை கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2022ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

நடிகை ப்ரணிதா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகி உள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

நடிகை ப்ரணிதா தற்போது ஒரு மலையாள மற்றும் கன்னட படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களையும் அவர் விரைவில் முடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.