சூர்யா-கார்த்தி இணையும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 18 2022]

சூர்யா, கார்த்தி இணையும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’விருமன்’. இந்த படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக அறிமுகமாகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன

இந்த நிலையில் சற்று முன்னர் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 31 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருநாளில் வெளியாக இருக்கும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்ட்ரி நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.

கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண், மைனா நந்தினி, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவும், வெங்கட்ராஜா படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.