சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கான பொங்கல் விருந்து அறிவிப்பு!

நாளை பொங்கல் தினத்தில் சூர்யா மற்றும் கார்த்தி நடித்த திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அவர்களது ரசிகர்களுக்கான சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘விருமன்’ என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதே சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கான பொங்கல் விருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே.

கார்த்தி ஜோடியாக பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நாளை காலை 10 மணிக்கு ‘விருமன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆக உள்ளதாக 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களுக்கு இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பொங்கல் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More News

தனுஷின் 'மாறன்' ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'மாறன்' படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

கொரோனா 3 ஆவது அலை முடிவுக்கு வருமா? மூத்த விஞ்ஞானி கூறிய பதில்!

இந்தியாவில் கொரோனா 3 ஆவது அலை துவங்கிவிட்டதை மத்திய

'வாடி என் ராஜகுமாரி': அருண்விஜய்யின் 'யானை' படத்தின் பாடல் ரிலீஸ்!

அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'யானை' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே

சமந்தா சந்தித்த அதே பிரச்சனையை எதிர்கொள்ளும் ரெஜினா!

சமீபத்தில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா' என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா டான்ஸ் ஆடிய நிலையில் அவருக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை 'ஆச்சார்யா'

பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த நடிகை ஓவியா!

பிரதமர் மோடியின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றுக்கு நடிகை ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.