சூர்யா - கார்த்தி இணையும் அடுத்த படத்தின் மாஸ் டைட்டில்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Friday,May 24 2024]

சூர்யா மற்றும் கார்த்தி இணையும் திரைப்படத்தில் அரவிந்த்சாமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் இரண்டு அப்டேட்கள் இன்று மாலை 5 மணிக்கும், 7 மணிக்கும் வெளியாகும் என 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இன்று காலை அறிவித்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரேம்குமார் இயக்கம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு தற்போது ’மெய்யழகன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போஸ்டரில் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சைக்கிளில் செல்வது போல் இருப்பதை அடுத்து இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சைக்கிள் ஒட்டிக்கொண்டிருக்கும் அரவிந்த்சாமி, சைக்கிள் பின்னால் ஸ்டைலாக உட்கார்ந்திருக்கும் கார்த்தி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

கோவிந்த வசந்தா இசையில், மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவில் , கோவிந்தராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது, மேலும் இந்த போஸ்டரின் பின்னணியில் தஞ்சாவூர் பெரிய கோவிலின் புகைப்படம் இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.