கிருஷ்ணன் வேடத்தில் செம க்யூட்: சூர்யா,கார்த்தி பட நடிகையின் குழந்தை புகைப்படங்கள் வைரல்!

  • IndiaGlitz, [Friday,August 19 2022]

சூர்யா நடித்த 'மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவருக்கும் தொழிலதிபர் நிதின் என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

நடிகை பிரணிதா தனது குழந்தையின் புகைப்படத்தை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார் என்பதும் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை பிரணிதா சற்று முன் தனது குழந்தைக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது குழந்தைக்கு கிருஷ்ணர் கெட்டப் போட்ட குழந்தையின் புகைப்படஙக்ளை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.