சூர்யா-கார்த்தி நாயகிக்கு திருமணம்: தொழிலதிபரை கைப்பிடித்தார்!

  • IndiaGlitz, [Monday,May 31 2021]

சூர்யா, கார்த்தி உள்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் மிகச் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ப்ரணிதா சுபாஷின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரணிதா சுபாஷ் தற்போது ’ரமண அவதார்’ என்ற கன்னட படத்திலும் ‘ஹங்மா 2’ உள்பட இரண்டு ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.