திரையுலக செண்டிமெண்டுக்களை அடித்து நொறுக்கிய சூர்யா-கார்த்தி

  • IndiaGlitz, [Tuesday,March 13 2018]

திரையுலகம் மட்டுமின்றி பொதுவாக அனைத்து துறையினர்களும் ஒரு புதிய காரியத்தை தொடங்கும்போது செவ்வாய்க்கிழமை தொடங்குவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள். அதிலும் செண்டிமெண்ட்டை அதிகம் பார்க்கும் திரையுலகில் செவ்வாய்க்கிழமை எந்தவித புதுப்பட அறிவிப்போ, பூஜையோ நடைபெறாது. அதுமட்டுமின்றி 13 என்ற எண் என்றாலே பதறி ஓடுவர் பலர்

இந்த நிலையில் இந்த இரண்டு செண்டிமெண்டுக்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர் திரையுலக சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி. ஆம் இருவரும் நடிக்கவுள்ள புதிய படங்களின் முக்கிய அறிவிப்பு இன்று 13ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார் என்பதும், கார்த்தியின் 17வது படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்திருந்தாலும் கார்த்திக், ரம்யாகிருஷ்ணன் உள்பட முக்கிய நட்சத்திரங்கள் இணைந்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.