close
Choose your channels

விஜய்யை அடுத்து அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா-கார்த்தி: தந்தை மறைவுக்கு இரங்கல்..!

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அஜித்தின் தந்தை பிஎஸ் மணி சமீபத்தில் காலமான நிலையில் அவரது வீட்டிற்கு நேரடியாக சென்ற விஜய், அஜித் தந்தை மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அஜித் தந்தை மறைவிற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இன்று நேரடியாக அவருடைய வீட்டுக்கு சென்று தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

அஜித் வீட்டிற்கு சூர்யா கார்த்தியின் கார் சென்ற வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அஜித்தின் வீட்டிற்கு சென்று அஜித்துக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சூர்யா மற்றும் கார்த்தி தங்களது குடும்பத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே தமிழகம் முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் கமலஹாசன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் அஜித்தின் தந்தை மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment