ஜோடியாக சென்று தடுப்பூசி போட்டு கொண்ட சூர்யா-ஜோதிகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாநில அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டுக்கொள்ளும் தடுப்பூசி தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தற்போது மக்களிடையே எழுந்துள்ளதை அடுத்து தினமும் லட்சக்கணக்கானோர் நாடு முழுவதும் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் குறிப்பாக திரையுலக பிரமுகர்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அடுத்து ரசிகர்களும் தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சற்று முன் நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சூர்யா-ஜோதிகா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்கள் சூர்யாவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
ஏற்கனவே சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமானார் என்பது தெரிந்ததே.
#Vaccinated pic.twitter.com/3SJG9wYPFD
— Suriya Sivakumar (@Suriya_offl) June 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com