PS1 இரண்டு கேரக்டர்களுக்கு பூங்கொத்து அனுப்பிய சூர்யா-ஜோதிகா: யார் யார் தெரியுமா?

சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் ’பொன்னியின் செல்வன்’ செய்திகளாக வெளியாகி கொண்டிருக்கின்றன.

உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்தவர்களுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி தனது சமூக வலைத்தளத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் அனுப்பிய பூங்கொத்துக்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்

அதேபோல் நடிகர் நடிகை த்ரிஷாவும் தனது சமூக வலைத்தளத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவருக்கும் நன்றி என்றும் அவர்கள் அனுப்பிய பூங்கொத்து மிகவும் இனிமையானது என்றும் பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.