ஜோடியாக இணைந்து செல்பி வீடியோ வெளியிட்ட சூர்யா-ஜோதிகா.. என்ன சொல்லியிருக்காங்க?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து வெளியிட்டுள்ள செல்பி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா-ஜோதிகா அந்த வீடியோவில் ரசிகர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த செய்திகளை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து செல்பி வீடியோ ஒன்றை தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ரசிகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளனர். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என சூர்யா மற்றும் ஜோதிகா ஒரே நேரத்தில் கூறும் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ’சூர்யா 42’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. அதேபோல் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’வணங்கான்’ என்ற படத்திலும் சூர்யா நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் மம்முட்டி நடித்து வரும் அடுத்த படத்திற்கு ’காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்து வருகிறார். இந்த படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஜியோ பேபி என்பவர் இயக்கவுள்ளார்.
#HappyDiwali pic.twitter.com/UVXgqL4VVq
— Studio Green (@StudioGreen2) October 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments