உறைபனியில் ஜோதிகாவுடன் ரொமான்ஸ் மூடில் சூர்யா.. லவ்லி வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,January 30 2024]

தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான சூர்யா - ஜோதிகா ஜோடி உறைபனியில் ரொமான்ஸ் மூடில் இருக்கும் வீடியோ அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

நடிகர் சூர்யா தற்போது ’கங்குவா’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் புத்தாண்டு கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் பின்லாந்து நாட்டிற்குச் சென்றார். அங்கிருந்து எடுத்த புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரல் ஆன நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜோதிகாவுடன் உறைபனியில் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் உள்ள சூர்யா ஜோதிகாவின் காட்சிகள் லவ்லியாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உறைபனியில், அழகிய லொகேஷனில் இருவரும் மகிழ்ச்சியுடன் விளையாடுவது உள்ளிட்ட காட்சிகள் இந்த வீடியோவில் இருப்பதை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூர்யா ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதன் பிறகு அவர் பாலிவுட்டில் பிரமாண்டமாக உருவாகும் ’கர்ணா’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.