சாய்பல்லவியுடன் மீண்டும் இணைந்த சூர்யா!
Send us your feedback to audioarticles@vaarta.com
சாய் பல்லவி நடித்த ’கார்கி’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘என்.ஜி.கே’ என்ற திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக சாய்பல்லவி நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சாய்பல்லவி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘கார்கி’ என்ற படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாய்பல்லவியுடன் சூர்யா மற்றும் ஜோதிகா இருக்கும் புகைப்படத்தை சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள் நிலையில் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவின் நிறுவனம் இணைந்துள்ளதால் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது 'கார்கி’ படக்குழுவுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிலைத்திருக்கும்! புதிய சிந்தனைகளும் எழுத்துகளும் கொண்டாடப்பட வேண்டும்! உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.
Jo & I are glad to associate with team #Gargi Some characters just stay in our minds! New thoughts and writing must be celebrated!Hope you all like it!@Sai_Pallavi92 #Jyotika @prgautham83 #AishwaryaLekshmi #GovindVasantha @kaaliactor @SakthiFilmFctry @blacky_genie @2D_ENTPVTLTD pic.twitter.com/uWpGDmgpSp
— Suriya Sivakumar (@Suriya_offl) June 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments