'சில்லுக்கருப்பட்டி' இயக்குனருக்கு சிறப்பு பரிசு கொடுத்த ஜோதிகா!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘சில்லுக்கருப்பட்டி’ என்ற திரைப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு கோலிவுட் திரையுலகினர் இந்த படத்தை கொண்டாடினார் அதுமட்டுமின்றி இந்த படத்தை இயக்கிய பெண் இயக்குநர் ஹலிதாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன அவருக்கு பாராட்டு விழாவும் சமீபத்தில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘சில்லுக்கருப்பட்டி’ பட இயக்குனர் ஹலிதா மற்றும் அவரது படக்குழுவினரை வீட்டுக்கு வரவழைத்த சூர்யா-ஜோதிகா தம்பதியினர், படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் கேக் வெட்டி இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாடினார். இதனை அடுத்து ஜோதிகா சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதாவுக்கு ஆப்பிள் மேக்புக் ஒன்றை தமது சார்பில் பரிசாக கொடுத்தார்.
இதுகுறித்து இயக்குனர் ஹலிதா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’சூர்யா மற்றும் ஜோதிகா எங்கள் டீமை வீட்டுக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்ததை எண்ணி நான் பேச்சற்று போனேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன். ஜோதிகா அவர்கள் எனக்கு ஆப்பிள் மேக்புக் ஒன்றை பரிசாக கொடுத்தது என்னால் மறக்க முடியாத நிகழ்வு என்று கூறியுள்ளார். தற்போது இயக்குனர் ஹலிதா ‘ஏலே’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya sir and Jyo ma’am invited our team home, appreciated all the technicians and actors.
— Halitha (@halithashameem) February 22, 2020
Extremely kind of them to pour praises on the film and going speechless by their words, I just held their hands to express my gratitude.
They also gifted me a MacBook Pro. pic.twitter.com/KD1J5UwefA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments