close
Choose your channels

சூர்யா-ஜோதிகா மகள் ஜெயித்த கோப்பை.. பெற்றோருக்கு பெருமை சேர்த்த தியா..!

Sunday, February 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா-ஜோதிகா நட்சத்திர தம்பதிகளின் மகள் தியா, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற கோப்பையுடன் எடுக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா-ஜோதிகாவுக்கு தியா மற்றும் தேவ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது தெரிந்ததே. தற்போது இருவரும் மும்பையில் உள்ள பள்ளியில் படித்து வரும் நிலையில் குழந்தைகளுக்காகவே சூர்யா-ஜோதிகா மும்பையில் குடியிருக்கின்றனர்

இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா மகள் தியா படித்து வரும் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்த நிலையில் ஒரு அணிக்கு கேப்டனாக செயல்பட்ட தியா வெற்றிகளை குவித்து கோப்பையை வென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வாங்கிய கோப்பையுடன் தனது பெற்றோருடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

சூர்யா மகள் தியா ஏற்கனவே படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில் தற்போது அவர் விளையாட்டிலும் சாதனை செய்து வருவதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.