சூர்யா-ஜோதிகா மகளின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் என்ன தெரியுமா?

நேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவை பார்த்தார்கள் என்பதும் இணையதளங்களில் இருந்து மதிப்பெண்களையும் டவுன்லோட் செய்தார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நிலையில் தற்போது அவரது மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதலே நன்றாக படிக்கும் தியா, பத்தாம் வகுப்பில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழில் 95, ஆங்கிலத்தில் 99 அறிவியலில் 98 மற்றும் சமூக அறிவியலில் 95 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் அனைவரும் எதிர்பார்த்ததுபோல் கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று தன்னுடைய பெற்றோருக்கும், தான் படித்த பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனையடுத்து சூர்யா-ஜோதிகா குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இதனை கொண்டாடி வருகின்றனர்.

அகரம் என்ற அமைப்பின் மூலம் ஏராளமான ஏழை குழந்தைகளுக்கு கல்வியுதவி கொண்டிருக்கும் சூரியா தன்னுடைய மகனின் மதிப்பெண்களை பார்த்து நிச்சயம் பெருமை அடைந்து இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நிலையில் சூர்யா சமீபத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அசத்திய நிலையில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் ’சூர்யா 41’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ அதனை அடுத்து சிறுத்தை சிவா, சுதா கொங்கரா, உள்பட பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.