மீண்டும் இணையும் சூர்யா-கவுதம் மேனன்: இன்று முதல் படப்பிடிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ’காக்க காக்’க மற்றும் ’வாரணம் ஆயிரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் சூர்யா நடித்து இருந்தார் என்பதும் இரண்டுமே மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணையும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையில் திடீரென ஒரு சில காரணங்களால் அந்த படம் நிறுத்தப்பட்டது
இந்த நிலையில் தற்போது மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணைந்து உள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடித்து வருவதாகவும் இன்று முதல் இந்த படப்பிடிப்பு தொடங்கியதாகவும் சூர்யா படப்பிடிப்பின் போது மிகவும் எனர்ஜியாக இருந்ததாகவும் பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
வெப்தொடராக இருந்தாலும் மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணைந்துள்ளது இரு தரப்பு ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Shooting for @menongautham - it's a web film starring Suriya. @Suriya_offl . Great energy on sets today!
— pcsreeramISC (@pcsreeram) November 17, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments