சூர்யா-திஷா பதானி ஏற்கனவே இணைந்து நடித்திருக்கின்றார்களா? வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,August 19 2022]

சூர்யா நடிக்க இருக்கும் 42வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார் என்பதும் இந்தப் படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் நாயகி உள்பட இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ’சூர்யா 42’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் திஷா பதானி நடிப்பது உறுதி செய்யப்பட்டால் முதல் முறையாக அவர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார் என்பதும் அது மட்டுமின்றி முதல் முறையாக தமிழில் என்ட்ரி ஆகிறார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் சூர்யா மற்றும் திஷா பதானி ஏற்கனவே ஒரு விளம்பரப் படத்தில் இணைந்து நடித்திருப்பதை தற்போது நெட்டிசன்கள் கண்டுபிடித்து அந்த விளம்பர வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பரத்தில் சூர்யா மற்றும் திஷா பதானி நடித்துள்ளனர் என்பது இந்த விளம்பர வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.