பாலா படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கின்றாரா சூர்யா? படக்குழுவினர் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,April 02 2022]

பேரழகன், மாஸ் என்ற மாசிலாமணி, வேல், வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, மாற்றான் ஆகிய படங்களில் சூர்யா இதுவரை இரட்டை வேடங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர் பாலா இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ’சூர்யா 41’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் இணையதளங்களில் கசிந்தது.

இதுகுறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்தபோது ’சூர்யா 41’ படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்றும் ஒரே ஒரு வேடத்தில் அதுவும் இதுவரை நடிக்காத வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த படத்தில் சூர்யா காது கேட்காத மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவலும் வதந்தி என்றே கூறப்படுகிறது.

கீர்த்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாகவும், மலையாள நடிகை மமிதா பைஜூ சூர்யாவின் தங்கையாகவும் நடிக்க உள்ளதாகவும் இருவருக்குமே இந்த படத்தில் சம அளவில் முக்கியத்துவம் இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .

தற்போது கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் அடுத்ததாக மதுரை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம் சூர்யாவின் வெற்றி படங்களில் ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'இந்தா வாங்கிக்கோ': பிரேம்ஜிக்கு பதிலடி கொடுத்த வெங்கட்பிரபு!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான 'மன்மதலீலை' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

'பீஸ்ட்' டிரைலருக்கு ஒரு முன்னோட்டம்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக

இளம் கதாநாயகியுடன் வெங்கட்பிரபு: பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படம்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மன்மதலீலை' என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன

ஒன் ரூல், நோ லிமிட்ஸ்: கமல்ஹாசனின் 'விக்ரம்' மாஸ் வீடியோ!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

லேட்டானாலும் ஹாட்டா இருக்கே: நடிகை கிரணின் 'அரபிக்குத்து' டான்ஸ்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பாக இந்த பாடலுக்கு  சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்பட பல பிரபல