close
Choose your channels

பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா சூர்யா? சூப்பர் ஹிட் படத்தின் 4ஆம் பாகம்..!

Tuesday, September 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


பாலிவுட்டில் உருவாகும் சூப்பர் ஹிட் படத்தில், நான்காவது பாகத்தில் சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கிறார், மேலும் அவர் நடித்து முடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தற்போது சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார், மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இந்நிலையில் அவர் ஒரு பாலிவுட் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'தூம்' திரைப்படத்தின் மூன்று பாகங்கள் வெளியாகி அனைத்துமே நல்ல வெற்றியை பெற்றது. குறிப்பாக 2013 ஆம் ஆண்டு அமீர்கான் நடிப்பில் வெளியான 'தூம்' மூன்றாம் பாகம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இதற்கிடையில், 'தூம்' திரைப்படத்தின் நான்காம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும், இதில் வில்லனாக சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையாக இருந்தால், சூர்யாவின் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment