சூர்யாவுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் என்ன சம்பந்தம்? என்.ஜி.கே குறித்த சுவாரஸ்ய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
சூர்யா இந்த படத்தில் 'நந்த கோபாலன் குமரன்' என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இதன் சுருக்கம் தான் 'என்.ஜி.கே' என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சூர்யா இந்த படத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர்காரராக நடித்துள்ளாராம். தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் நபராக சூர்யா நடித்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.
தென்கொரியாவில் ரிலீஸ் ஆகும் முதல் தமிழ் திரைப்படமான இந்த படத்தில் மைதிலி என்ற கேரக்டரில் சாய்பல்லவியும், வானதி என்ற கேரக்டரில் ரகுல் ப்ரித்திசிங்கும் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் 'யூ' சான்றிதழ் பெற்று 148 நிமிடங்கள் ரன்னிங் டைமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout