அபிஷேகபச்சனின் அழைப்பை ஏற்று கொண்ட சூர்யா

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவே மகிழ்ச்சிக்கடலில் மூழ்கி இருக்கின்றது. இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சென்னையின் எப்சி கால்பந்து அணி, இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்ததாக தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் கோப்பையையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளரும் பிரபல பாலிவுட் நடிகருமான அபிஷேக்பச்சன், தனது அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் மைதானத்தில் தனது அணியின் கொடியை பிடித்து அசைத்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இந்த வெற்றி குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் தனது மகிழ்ச்சியை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அபிஷேக்பச்சனுக்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துக்களை அதே டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து பதிலளித்த அபிஷேக், அடுத்தமுறை ஐஎஸ்.எல் போட்டி நடைபெறும்போது நீங்களும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். அபிஷேக்கின் அழைப்பை ஏற்றுக்கொண்டு உடனடியாக பதிலளித்த சூர்யா, 'கண்டிப்பாக வருகிறேன்' என்று கூறியிருந்தார்.

More News

தினேஷ் கார்த்திக்கை 'மெர்சல்' பாடல் மூலம் பாராட்டிய நடிகை

வங்கதேச அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து இந்தியாவின் ஹீரோ ஆனார் தமிழகத்தை சேர்ந்த தினேஷ்கார்த்தி

என்ன ஒரு கிளைமாக்ஸ்: தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய ஷங்கர்

நேற்று இந்தியாவின் ஹீரோ தினேஷ் கார்த்திக் தான். கிட்டத்தட்ட கைநழுவி போய்விட்ட ஆட்டத்தை தனது அதிரடி ஆட்டம் மூலம் மீட்டெடுத்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக்

ரஜினியின் கட்சி பெயர், கொடி அறிவிக்கும் தேதி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் ஆன்மீக சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் போலீசுக்கு ரீல் போலீஸ் வழங்கிய நிதியுதவி

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்த ஒருசில சம்பவங்கள்ல் காவல்துறையின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், காவல்துறை என்பது மக்களின் சேவையை அடிப்படையாக கொண்ட ஒரு புனிதமான பணி.

சென்னை பாக்ஸ் ஆபீசை கலக்கி வரும் கலகலப்பு2 - நாச்சியார்

மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய திரைப்படங்கள் வெளிவராததால் ஏற்கனவே வெளிவந்த சுந்தர் சியின் 'கலகலப்பு 2 மற்றும் ஜோதிகாவின் 'நாச்சியார்' ஆகிய படங்கள் சென்னையில் இன்னும் வெற்றிநடை போட்டு வருகிறது.