'சூர்யா 45' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இயக்குனர் , இசையமைப்பாளர் இவர்கள் தான்..!

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

சூர்யாவின் 45வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் பற்றிய தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

சூர்யா நடித்த 43ஆவது படமான கங்குவா வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது, அவர் ’சூர்யா 44’ படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில், சூர்யாவின் 45ஆவது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில், அரிவாளில் விபூதி, குங்குமம் வைத்து, நடுவில் வேல் இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும், ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முதலாக சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி இணையும் இத்திரைப்படம், ஏ.ஆர். ரஹ்மானின் இசையமைப்பால் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஃபேன் பாயாக இருந்தவன் இப்போது ஃபேமிலி பாய்.. 'வேட்டையன்' குறித்து ரக்சனின் பதிவு..!

"ஃபேன் பாயாக இருந்த நான் தற்போது ஃபேமிலி பாயாக மாறிவிட்டேன்" என்று ஆர்.ஜே. ரக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தனுஷின் 'குபேரா' ரிலீஸ் தேதி இதுவா? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் நடித்து வரும் "குபேரா" என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் ரிலீசாகும் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.

ஒரே வாரம் மட்டுமே இருந்த ரவீந்தருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? பிக்பாஸ் ஆச்சரியங்கள்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டது பார்வையாளர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.

வீட்டில் தெய்வ சக்தியை உணர்த்தும் புஷ்ப பிரசன்னம் : புஷ்ப பிரசன்ன ஜோதிடம்

பிரபல ஜோதிடர் Dr. N.R. விஹி நாராயணன் அவர்கள், ஆன்மீக கிளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், புஷ்ப பிரசன்ன ஜோதிடம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் கேம் சேஞ்சர் .. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது