'சூர்யா 45' படத்தின் இசையமைப்பாளர் திடீர் மாற்றம்.. ஏஆர் ரஹ்மானுக்கு பதில் யார்?
- IndiaGlitz, [Monday,December 09 2024]
சூர்யா நடித்து வரும் 45வது திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சூர்யா 44 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் 45வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாகவும், ஆன்மீக கதையம்சம் கொண்ட இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஜிகே விஷ்ணு பணிபுரிவார் என்று அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல், பிகில் உள்ளிட்ட சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். இன்று இந்த படத்தின் புதிய இசையமைப்பாளராக சாய் அபிநயங்கார் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பென்ஸ் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தவர்.
ஏ.ஆர். ரகுமானுக்கு பதிலாக இளம் இசையமைப்பாளரை களமிறக்கியுள்ளதை சூர்யா 45 படக்குழு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
We're thrilled to welcome @SaiAbhyankkar, a rising star and the youngest talent of #Suriya45 🤗@Suriya_offl @dop_gkvishnu @RJ_Balaji @DreamWarriorpic pic.twitter.com/CPpvFyXRxI
— SR Prabu (@prabhu_sr) December 9, 2024