close
Choose your channels

சூர்யாவின் 45வது படம்.. லொகேஷன் பார்க்க தொடங்கிய இயக்குனர்.. வைரல் புகைப்படம்..!

Tuesday, October 8, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் நிலையில், அவருடைய 45வது படத்தை இயக்கும் இயக்குநர் லொகேஷன் பார்க்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடித்து முடித்துள்ள "கங்குவா" என்ற திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், அவர் நடித்துள்ள 44வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யாவின் 45வது திரைப்படத்தை நடிகர் மற்றும் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், சற்று முன் லொகேஷன் பார்க்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு தான், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் "வாடிவாசல்" திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment