சூர்யாவின் 45வது படம்.. லொகேஷன் பார்க்க தொடங்கிய இயக்குனர்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் நிலையில், அவருடைய 45வது படத்தை இயக்கும் இயக்குநர் லொகேஷன் பார்க்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா நடித்து முடித்துள்ள கங்குவா என்ற திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், அவர் நடித்துள்ள 44வது படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சூர்யாவின் 45வது திரைப்படத்தை நடிகர் மற்றும் இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், சற்று முன் லொகேஷன் பார்க்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு தான், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சென்னை மெரினாவில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தவெக உறுப்பினர்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னை மெரினாவில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஐந்து பேர் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அ

அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த ஷாலினி.. இதுதான் காரணமா?

அஜித்துக்கு, அவரது மனைவி ஷாலினி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விவாகரத்தில் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு உடன்பாடு இல்லையா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சட்டப்படி பிரிய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இருவருமே ஆஜராகவில்லை

'சுந்தரி' சீரியல் நடிகைக்கு குருவாயூரில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலில் நடித்த நடிகைக்கு குருவாயூரில் நேற்று திருமணம் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நீ முடிவு பண்ண தேவையில்லை.. ஜாக்குலின் - பவித்ரா பயங்கர மோதல்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளே பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டாவது நாளில் மிகப்பெரிய சண்டை வந்தது