close
Choose your channels

அந்தமானில் ஆக்சன் காட்சிகள்.. 'சூர்யா 44' படத்தில் 1 நிமிட வீடியோவை வெளியிட்ட இயக்குனர்..!

Friday, May 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சூர்யா 44' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் அந்தமான் தீவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சமூக வலைதள பக்கத்தில் அந்தமானில் படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணி நடைபெறும் காட்சிகளின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்தமான் துறைமுகத்தில் உள்ள கப்பல் காட்சிகள் மற்றும் பிரமாண்டமாக செட் அமைக்கும் காட்சிகள் குறிப்பாக அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் எடுக்கப்பட உள்ள காட்சிகள் ஆகியவற்றின் வீடியோவை தொகுத்து வழங்கி கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் போது இது ஒரு அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் முதல் வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment