உதட்டில் சிகரெட்.. நடையில் ஸ்டைல்.. 'சூர்யா 44' படத்தின் மாஸ் வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்து வரும் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் சூர்யாவின் மாஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவில் நடந்ததை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் ஊட்டியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் சூர்யா உதட்டில் சிகரெட் புகைத்தபடி மாஸாக நடந்து வரும் காட்சியும் அதையடுத்து அவர் துப்பாக்கியால் சுடும் காட்சியும் இருக்கும் நிலையில் இந்த வீடியோ தற்போது சூர்யா ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் வழக்கம் போல் இந்த வீடியோவில் சூர்யா புகைபிடித்தபடி வந்த காட்சிக்கு சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவின் இறுதியில் இந்த படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
An unveiling maverick, ready to conquer 🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 22, 2024
Join the frenzy for #LoveLaughterWar and beyond!
Happy Birthday THE ONE ❤️🔥#HappyBirthdaySuriya #HBDTheOneSuriya
Wishes from team #Suriya44@Suriya_Offl @karthiksubbaraj @hegdepooja @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens… pic.twitter.com/JlxJnJB77E
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments