'சூர்யா 44' படத்தின் வில்லன் இந்த பிரபல ஹீரோவா? 2டி தயாரிப்பில் ஏற்கனவே நடித்தவர்..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

சூர்யா நடிக்க இருக்கும் 44வது திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக இம்மாத இறுதியில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர் அந்தமான் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு ’சூர்யா 44 ’ படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லனாக ’உறியடி’ விஜயகுமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

’உரியடி’ ’உரியடி ’ ’ஃபைட் கிளப்’ மற்றும் சமீபத்தில் வெளியான ’எலக்சன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக விஜயகுமார் நடித்த நிலையில் இதில் ’உரியடி 2’ என்ற படம் சூர்யா தயாரிப்பில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா தயாரித்த படத்தில் நடித்த விஜயகுமார் தற்போது சூர்யாவின் படத்தில் வில்லனாக நடித்த இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ’சூர்யா 44’ படத்தில் இன்னும் யார் யாரெல்லாம் நடிப்பார்கள் என்பதை இன்னும் சில நிமிடங்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

69 வயசில் கதை கேட்டு நடிக்கும் ஜனகராஜ்

நாயகன் படத்தில் வரும் நிலா அது வானத்து மேலே பாடலில் வரும் பலானது ஓடத்து மேலே என்ற வரி யாருக்கும் பிடிக்கவில்லை,

அஜித்தை சந்தித்த சிரஞ்சீவி.. அஜித்துக்காக இதையெல்லாம் செய்தாரா? ஷாலினி குறித்தும் பதிவு..!

அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதன் அருகே சிரஞ்சீவியின் 'விஸ்வாம்பரா' படப்பிடிப்பு நடந்த நிலையில்

மோடி வாழ்க்கை வரலாறு படத்தை இவர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும்: சத்யராஜின் தரமான பதில்..!

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியின் கேரக்டரில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் பரவிய நிலையில் இன்று

ரொம்ப ஸ்லோவா இருக்குது.. தாமரையின் கவிதை வரிகள் சூப்பர்.. 'இந்தியன் 2' பாடலுக்கு கமெண்ட்ஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகும் 'இந்தியன் 2 ' படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல்

6 மொழிகளில் வெளியான 'புஷ்பா 2' பாடல்.. 6 மொழிகளுக்கும் ஒரே பாடகி..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' படத்தின் பாடல் சற்றுமுன் ஆறு மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆறு மொழிகளில் உள்ள பாடலை ஒரே பாடகி பாடி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை