close
Choose your channels

அந்தமான் படப்பிடிப்பு முடிகிறதா? 'சூர்யா 44' படத்தின் சூப்பர் அப்டேட்..!

Thursday, June 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்றும் இந்த படத்தின் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் அந்தமானில் படமாக்கப்பட்டு விட்டதாகவும் படக்குழுவினர்கள் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை முதல் வாரம் வரை ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெறும் என்றும் அதன் பிறகு சூர்யா உட்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற இருப்பதாகவும் அங்கும் ஒரு பாடல் காட்சி மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.