இன்று நள்ளிரவு, நாளை காலை.. சூர்யா ரசிகர்களுக்கு டபுள் விருந்து.. சூப்பர் அறிவிப்புகள்..!

  • IndiaGlitz, [Monday,July 22 2024]

நடிகர் சூர்யா நாளை தனது பிறந்தநாள் நாளை கொண்டாட இருக்கும் நிலையில் இன்று நள்ளிரவு மற்றும் நாளை காலை என இரண்டு சூப்பர் அப்டேட்டுகள் வெளியாக இருப்பதை அடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளன.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறை தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு ’சூர்யா 44’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல் ’கங்குவா’ படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற ஃபயர் சாங் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது.

எனவே இன்று நள்ளிரவு மற்றும் நாளை காலை ஆகிய இரண்டு நாட்களிலும் சூர்யாவின் இரண்டு படங்களின் அப்டேட்டுகள் வெளியாகியிருப்பதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.