மல்டி ஸ்டார் படமாக உருவாகும் சூர்யாவின் அடுத்த படம்.. 'சூர்யா 43' படத்தின் ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,July 31 2023]

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து சூர்யாவின் 43வது படம், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்த படம் ஜிவி பிரகாஷின் 100வது படமாகவும் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் மல்டி ஸ்டார் படமாக வெளியாகி ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் சூர்யாவின் 43வது படமும் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் கட்டமாக இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் இணைந்துள்ளார் என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகர்கள் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார் படமாக உருவாக இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

கைபிடித்தபடி ஊர்சுற்றும் நடிகை தமன்னா- விஜய் வர்மா ஜோடி… செம வைரலான புகைப்படங்கள்!!

பிரபல நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இருவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் இவர்கள் அவ்வபோது ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர்

மொட்டைத் தலையுடன் மாஸ் லுக்கில் காயத்ரி சங்கர்.. ஹாலிவுட் படத்தில் நடிக்கின்றாரா?

விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்துள்ள நடிகை காயத்ரி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் பாலைவனத்தில் மாஸ் ஆக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில்

செல்வராகவன் - யோகி பாபு இணையும் அரசியல் படம்.. பிரபல இயக்குனரின் மகள் தான் நாயகியா?

செல்வராகவன் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் அரசியல் திரைப்படத்தில் பிரபல இயக்குனரின் மகள் தான் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இயக்குனரின் அடுத்த படம்.. முக்கிய அப்டேட்..!

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை என்பவரின் இயக்கத்தில் உருவான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது

பிரபல நடிகையுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்: அந்தரங்க வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

பிரபல நடிகையுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த தயாரிப்பாளர் ஒருவர் நடிகையின் அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.