'சூர்யா 43' படத்தின் பணி தொடக்கம்.. முதலில் இணைந்தவர் இவர்தான்..! வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிக்க இருக்கும் 43 வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. அது மட்டுமின்றி இந்த படம் ஜிவி பிரகாஷ்க்கு 100வது படம் என்ற பெருமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் ‘சூர்யா 43’படத்திற்கான பாடல் கம்போஸ் பணியை தொடங்கிவிட்டதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். முதல் பாடலை சந்தோஷ் நாராயணன் மகளும் பிரபல பாடகியுமான தீ பாட இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஜிவி பிரகாஷ், சுதா கொங்காரா மற்றும் தீ உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
‘சூர்யா 43’ படத்தின் முதல் பாடலின் ஒலிப்பதிவு பணி தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
#Suriya43 #GV100 first recording starts with our most successful combination singer @talktodhee …. Let’s goooo . @Sudha_Kongara @Suriya_offl @rajsekarpandian pic.twitter.com/IMIccgOcSq
— G.V.Prakash Kumar (@gvprakash) January 1, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com