'சூர்யா 42' படத்தின் டைட்டில் டீசர் எப்போது? படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,March 12 2023]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. சூர்யா இந்த படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பதும் அதேபோல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 13 மொழிகளில் இந்த படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சரித்திர கதை அம்சம் கொண்ட காட்சிகள் இடம்பெற இருப்பதாகவும் அதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அதற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படம் 13 மொழிகளில் வெளியாக இருப்பதால் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒரு டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த டைட்டில் டீசர் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து ஏப்ரல் 14ஆம் தேதி சூர்யா ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மாறி மாறி முத்தம் கொடுக்கும் ஸ்ருதிஹாசனும் அவரது காதலரும்.. வைரல் வீடியோ..!

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது காதலருக்கு முத்தம் கொடுக்க பதிலுக்கு காதலர் அவருக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'ஏகே 62' படத்தில் இருந்து விலகியதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்தாரா விக்னேஷ் சிவன்?

அஜித் நடிக்கவுள்ள 'ஏகே 62' என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க

தனித்துவமான 100 பெண்களில் விருது பெற்ற முதல் தமிழ் நடிகை!

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த தனித்துவமான பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக 'தி பினோமினல் ஷி' (THE PHENOMENAL SHE) அதாவது தனித்துவமான பெண் என்கிற விருதை

ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நயன்தாராவால் இழந்தேன்: பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நயன்தாராவால் இழந்தேன் என பிரபல நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காஷ்மீர் ஹோட்டலில் அன்பை வெளிப்படுத்திய த்ரிஷா.. என்ன செய்திருக்கின்றார் பாருங்கள்..!

நடிகை த்ரிஷா தற்போது காஷ்மீரில் விஜய்யின் 'லியோ' படத்தின் கலந்து கொண்டிருக்கும் நிலையில் தான் தங்கி இருக்கும் ஹோட்டலில் அன்பை வெளிப்படுத்தியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில்