'சூர்யா 42' படத்தின் டைட்டில் இதுதான்.. இணையத்தில் வைரலாகும் மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,February 28 2023]

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சரித்திர கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் திரைக்கதை இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வித்தியாசமான அம்சமாக இருக்கும் என்றும் அதுமட்டுமின்றி பிரமாண்டமாக இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.,

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் டைட்டில் ’வீர்’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறுத்தை சிவாவின் ’வி’ சென்டிமென்ட் இந்த படத்திலும் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ’சூர்யா 42' படத்திற்கு 'SWORD’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் கிட்டத்தட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ளதால் அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் வகைகளில் இந்த டைட்டில் இருக்கும் எனவும் படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ’சூர்யா 42' படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பொறக்கும் போதும் துரோகம் பண்ணு, இறக்கும் போதும் துரோகம் பண்ணு.. 'அகிலன்' சிங்கிள் பாடல்..!

 ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' என்ற திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

கணவர் இறந்த 24 நாட்களில் மனைவியும் மரணம்.. பிரபல இயக்குனர் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்..!

பிரபல இயக்குனர் மறைந்து 24 நாட்களில் அவரது மனைவியும் காலமாகி உள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2': ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன் 2' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் இதுவா? மாஸ் டைட்டில் என ரசிகர்கள் கொண்டாட்டம்..!

 விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் மாஸ் டைட்டில் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

எனக்கும் 'அரியவன்' படத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது: மித்ரன் ஜவஹர்

தனுஷ் நடித்த 'யாரடி நீ மோகினி' 'குட்டி' 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவஹர்இயக்கத்தில் 'அரியவன்' என்ற திரைப்படம் உருவாகி இருப்பதாகவும்