'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்.. ஃபர்ஸ்ட்லுக் எப்போது?

  • IndiaGlitz, [Monday,January 16 2023]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 21ஆம் தேதி முதல் கேரளாவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படப்பிடிப்பில் சரித்திரகால காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஒரு சில மாதங்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில் ஏப்ரல் மாதம் சூர்யாவின் பிறந்தநாளின் போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் திருவிழா கால திரைப்படமாக இந்த படம் வெளியாகும் என்றும் தெரிகிறது.

தமிழ் உள்பட 13 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா சரித்திர கால மற்றும் நிகழ்கால கேரக்டர்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு ’வீர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் இந்த படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

அரசியலில் குதிக்கின்றாரா 'துணிவு' மஞ்சுவாரியர்? அவரே அளித்த பதில்!

நடிகை மஞ்சு வாரியார் கேரளா அரசியலில் குதிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த தகவல்களுக்கு அவரை விளக்கம் அளித்துள்ளார். 

'ஜப்பான்' படத்தின் செம போஸ்டர்.. வித்தியாசமான தோற்றத்தில் கார்த்தி!

 கார்த்தி நடித்த 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'சர்தார்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அவர் 'ஜப்பான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியின் 29வது படம்.. மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

 தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

தயாநிதி அழகிரி குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய தமிழ் நடிகர்...வைரல் புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி மகனுமான பிரபல தயாரிப்பாளர் தயாநிதி அழகிரியின் குடும்பத்துடன் தமிழ் நடிகர் ஒருவர் குடும்பத்துடன்

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தமிழ் நடிகைக்கு ஏற்பட்ட சோதனை.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

தமிழ் நடிகை ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நோய் அவரை தாக்கி உள்ளதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை