'சூர்யா 42' படக்குழுவினர் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு: பெரும் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ திரைப்படம் 3டி டெக்னாலஜியில் உருவாகி வருகிறது என்றும் இந்த படம் தமிழ் உள்பட 10 இந்திய மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் இந்த மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆன பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ’சூர்யா 42’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் படக்குழுவினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு தீர்வு காணும் விதமாக இந்த எச்சரிக்கை அறிக்கை வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். எங்கள் தயாரிப்பு திரைப்படமான ’சூர்யா 42’ படப்பிடிப்பு தளங்களில் இருந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்வதை நாங்கள் கவனித்து வருகிறோம். நாங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் ரத்தம் மற்றும் வியர்வையை உள்ளடக்கியது. இந்த படத்தை அனைவருக்கும் திரையரங்குகளில் பிரமாண்டமான அனுபவமாக தர விரும்புகிறோம். எனவே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீங்கள் வெளியிட்டு இருந்தால் அதை உடனடியாக நீக்க வேண்டும். எதிர்காலத்திலும் அதை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் பதிவு செய்பவர்கள் மீது உரிமை மீறல் தடை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please Don't Share Any Shooting Spot Videos and Photos about #Suriya42 pic.twitter.com/idnGu4VXvz
— Studio Green (@StudioGreen2) September 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com