'சூர்யா 42' படத்தின் புதிய போஸ்டருடன் அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Tuesday,April 11 2023]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 42’. தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9.05 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இந்த புதிய போஸ்டருடன் டைட்டில் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

ஜான்வி கபூர் நடிக்கும் 2வது தென்னிந்திய திரைப்படம்.. ஹீரோ இவர் தான்..!

 பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜான்வி கபூர் ஏற்கனவே ஒரு தென்னிந்திய படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் தற்போது மீண்டும் ஒரு தென்னிந்திய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

இந்த சாதனையை செய்யும் முதல் தென்னிந்திய திரைப்படம்: 'PS 2' குறித்து லைகா தகவல்..!

தென்னிந்திய சினிமாக்களில் இந்த சாதனையை செய்யும் முதல் படம் 'பொன்னியின் செல்வன் 2' படம் தான் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. 

கர்ப்பிணி மனைவிக்கு லிப்கிஸ் முத்தம்.. 'துணிவு' பட நடிகரின் பீச் ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

அஜித்தின் 'துணிவு' படத்தில் நடித்த நடிகர் தனது கர்ப்பிணி மனைவிக்கு பீச்சில் ரொமான்ஸ் லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

கர்ப்பமாக இருந்த ஸ்ரேயா.. இப்போது இருக்கும் ஸ்ரேயா.. என்ன ஒரு மாற்றம்.. வைரல் புகைப்படம்..!

கடந்த 2021 ஆம் ஆண்டு கர்ப்பிணி ஆக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் நடிகை ஸ்ரேயா சரண் பதிவு செய்துள்ள நிலையில் இரண்டே வருடத்தில் என்ன

சோனியா அகர்வாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்.. யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க..!

நடிகை சோனியா அகர்வாலின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.