'சூர்யா 42' படத்தின் புதிய போஸ்டருடன் அதிரடி அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 42’. தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 9.05 மணிக்கு அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இந்த புதிய போஸ்டருடன் டைட்டில் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவல் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Warrior enters across the showers of glory and trumpets of Thunderstorms!
— Studio Green (@StudioGreen2) April 11, 2023
Get ready to welcome #Suriya42 Title Announcement on April 16, at 9.05 a.m. 🎉
A Mighty Valiant Saga In 10 Languages 🔥@Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @kegvraja @UV_Creations pic.twitter.com/Hfa7uErXAK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com