'சூர்யா 42' குறித்த சூப்பர் தகவல் சொன்ன படக்குழுவினர்: வைரல் புகைப்படம்!

சூர்யா நடித்துவரும் 42வது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கோவாவில் நடந்து வந்தது என்பது தெரிந்ததே. சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’சூர்யா 42’ படத்தின் கோவா படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சூர்யா விருது வாங்குவதற்காக டெல்லி சென்றிருந்ததால் முதல்கட்ட படப்பிடிப்பு முடியும் நிறைவு நாளில் அவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’சூர்யா 42’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் அதில் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையில், பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வரும் இந்த படம் 3D டெக்னாலஜியில் 10 மொழிகளில் உருவாகி வருகிறது.

More News

'காட்ஃபாதர்' படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி: என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் உருவான 'காட்ஃபாதர்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும்

கார்த்தியின் 'சர்தார்' படத்தின் 'ஏறுமயிலேறி' பாடல் ரிலீஸ்!

கார்த்தி நடித்த 'சர்தார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும்

'மாநாடு' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. மாஸ் அறிவிப்பு!

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான 'மாநாடு' திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார் என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு நல்ல

'தளபதி 67' படத்தின் அறிவிப்பு எப்போது? லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தை விட தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர் என்பதும் இந்த படம் நிச்சயம் தமிழ் திரை உலகில் ஒரு

முதல் நாளே ஜிபி முத்துவை அலற வைத்து சக போட்டியாளர்: வீடியோ வைரல்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது என்பதும் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார் என்பது தெரிந்ததே.