200 ஸ்டண்ட் கலைஞர்கள், பிரமாண்டமான செட்.. 'சூர்யா 42' படம் குறித்த ஆச்சரிய தகவல்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

3டி டெக்னாலஜியில் உருவாகும் இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய ஐந்து கேரக்டர்களில் சூர்யா நடித்து வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ’சூர்யா 42’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கோவாவில் நடைபெறவிருப்பதாகவும், அங்கு பிரம்மாண்டமான செட் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் செப்டம்பர் இறுதி வாரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படப்பிடிப்பில் சுமார் 200 ஸ்டண்ட் கலைஞர்களுடன் சூர்யா மோதும் பிரமாண்டமான ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் முறையாக சூர்யா ஐந்து வேடங்களில் நடிக்கும் இந்த படம் தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வருகிறது.

சூர்யா ஜோடி திஷா பதானி நடிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷா யூசூப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

பாத்ரூமில் ரகசிய கேமிரா வைத்து வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி: பிரபல நடிகரின் அறிவுரை!

 கல்லூரி ஹாஸ்டல் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்து குளிக்கும் கல்லூரி மாணவிகளை வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை தனது காதலனுக்கு அனுப்பிய மாணவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள

'சார்பாட்டா பரம்பரை' மாரியம்மாவா இவர்? பிங்க் பிகினியில் கலக்கல் புகைப்படங்கள்!

'சார்பாட்டா பரம்பரை'  என்ற திரைப்படத்தில் மாரியம்மா என்ற கேரக்டரில் அற்புதமாக நடித்த நடிகை துஷாரா விஜயன், பிகினியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம்

'வாரிசு' படத்தை ஓடிடியில் வெளியிடுங்கள்: திடீர் ஹேஷ்டேக்கால் பரபரப்பு!

தளபதி விஜய் படம் என்றாலே திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு விஜய் ரசிகரின் ஆசையாக இருக்கும். இந்த நிலையில் திடீரென அவர் நடித்து வரும் 'வாரிசு' படத்தை ஓடிடியில் ரிலீஸ்

ஒருவழியாக சென்னை திரும்பிய அஜித்.. 'ஏகே 61' படப்பிடிப்பு எப்போது?

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் 'ஏகே 61' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 

இதுக்கு பேர் தான் மேலாடையா? பிரபல நடிகையின் போட்டோஷூட்டை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பிரபல நடிகை ஒருவர் கிட்டத்தட்ட நிர்வாணமாக போஸ் கொடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்துள்ள நிலையில் நெட்டிசன்கள் அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.