'சூர்யா 42' திரைப்படம் எத்தனை மொழிகளில் உருவாகிறது தெரியுமா? ஆச்சரியமான தகவல்!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 42’ படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக ’சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு பான் - இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக பான் - இந்தியா திரைப்படம் என்றால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் மட்டுமே உருவாகும் என்றும் ஆனால் ’சூர்யா 42’ திரைப்படம் 10 மொழிகளில் உருவாக இருப்பதாக ஆச்சரியமான தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் அடுத்த வாரம் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

’சூர்யா 42’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் அதன் பிறகு படக்குழுவினர் கோவா செல்ல இருப்பதாகவும் அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூர்யா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார் என்பதும், ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.