'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 42’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கயிருக்கும் நிலையில் மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சற்று முன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி ’சூர்யா 42’ படத்தின் மோஷன் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோஷன் போஸ்டர் வீடியோவை சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்': சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டிருப்பது

கார்கில் நினைவிடத்தில் அஜித் என்ன செய்தார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

தல அஜித் தற்போது வட இந்தியாவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் அவர் கார்கில் நினைவிடத்திற்கு சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

பெங்களூரு கனமழை, வெள்ளம் எதிரொலி: ஒரு இரவுக்கு லாட்ஜில் இத்தனை ஆயிரம் வாடகையா?

பெங்களூரு நகரில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்ததை அடுத்து சாதாரணமானவர்களின் வீடு முதல் கோடீஸ்வரர்களின் வீடு வரை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனை அடுத்து பெங்களூரில் உள்ள

இப்படியெல்லாம் வொர்க்-அவுட் செய்ய முடியுமா? பிகில் நடிகையின் வேற லெவல் வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிரமைல் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்துடன் கனெக்சன் ஆன 'இந்தியா-பாகிஸ்தான்'!

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான