'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 42’. இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கயிருக்கும் நிலையில் மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், கோவை சரளா ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சற்று முன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி ’சூர்யா 42’ படத்தின் மோஷன் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோஷன் போஸ்டர் வீடியோவை சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tomorrow a Surprise for you??#Suriya42MotionPoster Video will be out tomorrow at 10 am. Excited ??#Suriya42 @Suriya_offl @DishPatani @directorsiva @StudioGreen2 @UV_Creations #Vamsi #Pramod @kegvraja @ThisIsDSP @iYogiBabu @vetrivisuals #Milan @SupremeSundar_ #AdiNarayana pic.twitter.com/3EmG7ebr0P
— Studio Green (@StudioGreen2) September 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com