பிரபல இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகியானார் 'சூர்யா 41' நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில், பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 41’ படத்தில் நடித்து வரும் நடிகை, பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நாயகியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் ’சூர்யா 41’ படத்தின் நாயகியாக நடித்து வருபவர் கீர்த்தி ஷெட்டி என்பது அனைவரும் அறிந்ததே. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள இவர் தற்போது தமிழில் ’சூர்யா 41’ படத்தின் மூலம் கால் பதித்துள்ளார்.
இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகவிருக்கும் தமிழ், தெலுங்கு திரைப்படத்திலும் கீர்த்தி ஷெட்டி தான் நாயகி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கீர்த்தி ஷெட்டிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த தெலுங்கு திரைப்படமான 'உப்பென்னா’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற கீர்த்தி ஷெட்டி தற்போது தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
’மாநாடு’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் நேற்று ஒரு பாடல் பதிவும் விட்டதாகவும் கூறப்படுகிறது.
Welcome aboard The most happening @IamKrithiShetty
— venkat prabhu (@vp_offl) June 23, 2022
Next Announcement Will Enthrall You Today at 11:08 AM ??#NC22Begins ❤️??#NC22 @chay_akkineni @srinivasaaoffl @SS_Screens pic.twitter.com/2tp5rZgIm4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com