சூர்யா பிறந்த நாளில் ரசிகர்களுக்கு செம விருந்து!

  • IndiaGlitz, [Saturday,July 17 2021]

சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து சூர்யாவின் ரசிகர்கள் இப்போதே அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் ஏற்பாடுகளில் உள்ளனர். இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு செம விருந்து ஒன்று காத்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’சூர்யா 40’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பதும் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்தில் சூர்யா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி ’சூர்யா 40’ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் சூர்யா பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். டி. இமான் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் ஆண்டனி பாடலுக்கு செம ஆட்டம் போடும் ஸ்ரீதேவி மகள்!

மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகின் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார் என்பதும் அவர் தற்போது ரோஹி, தோஸ்தானா மற்றும் குட்லக் ஜெர்ரி

தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த இளம் மாடல்.....!

தயாரிப்பாளர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக மாடல் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கவர்ச்சியாக இல்லை… மோசமான விமர்சனத்தால் ஒலிம்பிக் வீராங்கனைகள் உருக்கம்!

அழகு என்பது ஒருவரின் தோற்றத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளாத சிலபேர் தொடர்ந்து

விடுமுறையில் விமானம் தயாரித்த பள்ளி மாணவன்… வியந்து பாராட்டும் கிராம மக்கள்!

கொரோனா காலத்தை விடுமுறை மாதிரிதான் பெரும்பாலான மாணவர்கள் கருதி வருகின்றனர்.

வார்த்தை இல்லாமலே பேசும் எமோஜிகள் பற்றிய சுவாரசியக் கதை !

சோஷியல் மீடியாக்களில் அதிகளவு பயன்படுத்தப்படும் எமோஜிகளைப் பற்றி பலரும் அறிந்து இருப்போம்