சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது குறித்த பட்டியலில் வெற்றிமாறன் உள்பட பலர் இருந்தனர். இதனை அடுத்து தற்போது சூர்யாவின் 40வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது
சூர்யாவின் 40வது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்குவதாகவும், இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது தாணு-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது என்பதும் இந்த கூட்டணியில் சூர்யா தற்போது இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
After the tremendous success of Asuran, director @VetriMaaran will be teaming up with @Suriya_offl
— Kalaippuli S Thanu (@theVcreations) December 21, 2019
for the first time in #Suriya40 @theVcreations is happy and proud to produce this film.
- S.Thanu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments