'சூர்யா 40' படம் குறித்து சூப்பர் அட்பேட் தந்த சன் பிக்சர்ஸ்: ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Monday,July 19 2021]

நடிகர் சூர்யா நடித்து வரும் 40வது திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா வரும் 23ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ’சூர்யா 40’ படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’சூர்யா 40’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார் என்பதும் பாண்டிராஜ் இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ’சூர்யா 40’படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.